இந்தியாவில் வெள்ளம் – 29 பேர் பலி!

கடும் வெள்ளம் மற்றும் மழையுடனான வானிலை காரணமாக இந்தியாவில் இதுவரையில் 29 பேர் வரை உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெள்ளநிலை காரணமாக இமாச்சல் பிரதேசம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் 300 பேர் வரை சிக்கிக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீட்புக் குழுவினர், மீட்பு பணிகளுக்காக குறித்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை காணப்படுவதாகவும், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசமும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply