நாட்டில் அதிக வருமானம் பெறுபவர்கள் அரசமானியங்களை பெறுவதாக தகவல்!

நாட்டில் அதிக வருமானம் ஈட்டுபவர்களில் 12 வீதமானோர் அரசாங்க மானியங்களைப் பெறுவதாக தெரியவந்துள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அரசின் நலத்திட்ட உதவிகள் முறையாக செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

நலன்புரிச் சலுகைகள் சட்டத்தை முறையாக அமுல்படுத்துவதன் மூலம், சம்பந்தப்பட்ட தகவல் வழங்குநரும், தகவல் சேகரிப்பாளரும் பொறுப்பாவார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சில அரசு அதிகாரிகள் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயங்குவதால், தகவல்களைச் சேகரிக்க பயிற்சியாளர்களைக் கொண்ட குழுக்களை நியமிக்க வேண்டியிருந்தது எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply