இலங்கையில் வளர்ந்து வரும் ஆசிய அணிகளுக்கான தொடர்

வளந்து வரும் ஆசிய அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் இன்று(13.07) ஆரம்பித்துள்ளது. இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் ஆகிய அணிகள் இந்த தொடரில் பங்குபற்றவுள்ளன. ஏழு நாடுகளை பிரதிநிதித்துவம் செய்யும் A அணிகளும், நேபாளம் தேசிய அணியும் பங்குபற்றும் இந்த தொடர் இலங்கையில் நடைபெறவுள்ளது.

SSC மைதானத்தில் இலங்கை A அணி பங்களாதேஷ் A அணியை சந்திக்கிறது. மற்றுமொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் A அணி, ஓமான் A அணியை சந்திக்கிறது.

14 ஆம் திகதி இந்தியா A, ஐக்கிய அரபு அமீரகம் A அணிகளுக்கான போட்டி SSC மைதானத்தில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் A அணி நேபாளம் ஆகிய அணிகளுக்கான போட்டி நடைபெறவுள்ளது.

15 ஆம் திகதி பங்களாதேஷ் A மற்றும் ஓமான் A ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டி SSC மைதானத்திலும், இலங்கை A, ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கிடையிலான போட்டி CCC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

16 ஆம் திகதி போட்டிகள் எதுவுமில்லை. 17 ஆம் திகதி பாகிஸ்தான் A மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் A அணிகளுக்கிடையிலான போட்டி பி.சரவணமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியா A மற்றும் நேபாளம் அணிகளுக்கிடையிலான போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

18 ஆம் திகதி பங்களாதேஷ் A மற்றும் ஆப்கானிஸ்தான் A அணிகளுக்கிடையிலான போட்டி பிசரவணமுத்து மைதானத்திலும், மற்றைய போட்டி இலங்கை A மற்றும் ஓமான் A அணிகளுக்கிடையில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகல் இரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

19 ஆம் திகதி நேபாளம் அணிக்கும் ஐக்கிய அரபு அமீரகம் A அணிக்குமான போட்டி பிசரவணமுத்து மைதானத்திலும், பாகிஸ்தான் A மற்றும் இந்தியா A அணிகளுக்கிடையிலான போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது.

21 ஆம் திகதி இரண்டு அரை இறுதிப் போட்டிகளும், 23 ஆம் திகதி இறுதிப் போட்டியும் நடைபெறவுள்ளது.

இலங்கை A அணி டுனித் வெல்லாலகேயின் தலைமையில் விளையாடவுள்ளது.

இலங்கை அணி

டுனித் வெல்லலாகே, மினோட் பானுக, ஷெஹான் ஆராச்சிகே, அஷேன் பண்டார, லசித் குரூஸ்புல்லே, அவிஷ்க பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ, துஷான் ஹேமந்த, சாமிக்க கருணாரட்ன, ஜனித் லியனகே, பிரமோத் மதுஷன், லஹிரு சமரகோன், பசிந்து சூரியபண்டார, லஹிரு உதார, இசித் விஜேசுந்தர ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

Social Share

Leave a Reply