இந்தியா அணி பலமாக முன்னிலையில்

இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸ்க்காக துடுப்பாடி வரும் இந்தியா அணி மெதுவான பலமான நிலைய பெற்றுள்ளது. 113 ஓவர்களை எதிர்கொண்டு 2 விக்கெட் இழப்பிற்கு 312 ஓட்டங்களை இந்தியா அணி பெற்றுள்ளது.

தனது அறிமுக போட்டியில் சதமடித்து ஆட்டமிழக்கமால் 143 ஓட்டங்களை பெற்றுள்ளார். ரோஹித் ஷர்மா 103 ஓட்டங்களை’பெற்றுக் கொண்டார். ஆரமப விக்கெட் இணைப்பாட்டம் 229 ஓட்டங்கள். விராத் கோலி ஆட்டமிழக்காமல் 36 ஓட்டங்களை’பெற்றுள்ளார்.

முன்னதாக தமது முதல் இன்னிங்சில் துடிப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 150 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. துடுப்பாட்டத்தில் அறிமுக வீரர் அலிக் ஆதன்ஸ் 47 ஓட்டங்களை பெற்றார். கிரைக் ப்ராத்வைட் 20 ஓட்டங்கள். பந்துவீச்சில் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது 35 ஆவது ஐந்து விக்கெட் பெறுதியினை பெற்றுக் கொண்டார். ரவீந்தர் ஜடேஜா 3 விக்கெட்களையும், மொஹமட் சிராஜ், ஷர்டூல் தாகூர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இன்று(14.07) போட்டியின் மூன்றாம் நாளாகும்.

Social Share

Leave a Reply