தென்னிந்திய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் இன்று (14.07) கட்டுநாயக்க விமானநிலையம் ஊடாக மலேசியாவிற்கு பயணித்துள்ளார் எனவும், அதன்போது அவருக்கு வரவேற்ப்பு அளிக்கப்பட்டதாகவும், ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-122 விமானத்தின் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஜனிகாந்த், இங்கிருந்து மலேசியாவிற்கு பயணித்துள்ளதாகவும் விமான நிலைய தகவல்கள் மூலம் அறியமுடிகிறது.
இதன்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்கள் வரவேற்பளித்ததாக நம்பப்படுகிறது.