ஸ்பெயினில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ!

ஐரோப்பா முழுவதும் வெப்பமான காலநிலை பதிவாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்பெயினின் கேனரி தீவுகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதிகளில் இருந்து 2500 இற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பாக ஸ்பெயினின் கேனரி தீவுகளில் உள்ள லா பால்மாவில் காட்டுத் தீ மிகத் தீவிரமாகப் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் கேனரி தீவுகளைச் சுற்றியுள்ள 4500 ஹெக்டேர் நிலம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதுடன், சுமார் 300 தீயணைப்பு வீரர்கள் விமானங்களின் உதவியுடன் தீணை அணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெயினில், கடந்த ஆண்டு சுமார் 500 காட்டுத் தீ சம்வங்கள் பதிவாகின. இதில் 300,000 ஹெக்டேர் நிலங்கள் அழிக்கப்பட்டன.

Social Share

Leave a Reply