தென் கொரியாவில் வெள்ளம் – 39 பேர் பலி!

தென் கொரியாவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக அந்நாட்டின் பல பகுதிகளில் வெள்ளநிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக குறைந்தபட்சம் 39 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இந்த அனர்த்த நிலைமை காரணமாக 10ற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் சேவைகளும் முற்றிலுமான இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் பல சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக நீர் நிலைகள் நிறைந்திருப்பதால் பாரிய வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும், இதுவரையில் 6,400 பேரை வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply