கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.
கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு வைத்தியர்கள் இன்று (19.07) காலை 8.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்த நிலையில், குறித்த போராட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியர் ஒருவருக்கு எதிராகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த விசேட வைத்திய அதிகாரி தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன எழுத்து மூலமாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு அறிவித்ததையடுத்தே இந்த பணிபுறக்கணிப்பு நடவடிக்கை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.