கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் அமரர் சின்னத்தம்பி நடேசபிள்ளை ஞாபகார்த்தமாக அமைக்கப்பட்ட ஆருக்ஷ்கிருத்திக் கலையரங்கம் நேற்று (18.07) காலை 10.00மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியின் அதிபர் குறித்த.ரவீந்திரா அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில், வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு குறித்த கலையரங்கத்தை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண கல்விப் பணிப்பாளர் த.ஜோன் குயின்ரஸ் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் கி.ச கிருஷ்ணேந்திரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் க.அ சிவனருள்ராஜா, பளை கோட்டக்கல்வி அலுவலர் தி.திலீபன், ஓய்வுநிலை மேலதிக வடமாகாண கல்விப் பணிப்பாளர் ப. அரியரத்தினம், முல்லைத்தீவு ஓய்வுநிலை பிரதிக் கல்விப் பணிப்பாளர் கு.சிவானந்தம், கிளிநொச்சி மாவட்ட சாரணிய உதவி ஆணையர் சி.விக்கினேஸ்வரன், கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் அலுவலக சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் க. தனபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு கௌரவ விருந்தினர்களாக Director, N.K Ruban Store Ltd Company & Nadesh Fine Arts Acadamy – London நடேசபிள்ளை காந்தரூபன் மற்றும் Director – Nadesh Fine Arts Acadamy – London ஸ்ரீமதி. கைஷிலஜா காந்தரூபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அதிதிகள் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தொடர்ந்து பாடசாலைக்கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சாள்ஸ் அவர்கள் குறித்த கலையரங்கத்தின் திரைக்கல்லினை திரைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாடாவினை வெட்டி திறந்து வைத்தார்.

ஆருக்ஷ்கிருத்திக் கலையரங்கத்தில் விருந்தினர் உரைகள், கௌரவிப்பு நிகழ்வுகள், கலை நிகழ்வுகள் என்பன சிறப்புற இடம்பெற்றன.
இந் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பழைய மாணவ சங்கத்தினர், நலன்விரும்பிகள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப் பணிமனையின் ஒரேஒரு தேசிய பாடசாலையான கிளி. பளை மத்திய கல்லூரியில் 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட குறித்த கலையரங்கம் திறந்து வைக்கப்பட்டதனூடாக பாடசாலையின் நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்பட்டுள்ளமை விசேடம்சமாகும்.