ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (20.07) இந்தியா செல்லவுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, இந்தியப் பிரதமர் மற்றும் ஏனைய பிரமுகர்களுடனான சந்திப்பின்போது இந்திய அரசுக்கும் இலங்கைக்கும் இடையே கடன் மறுசீரமைப்பு தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதுடன், பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் போது வழங்கப்பட்ட உதவிகள் மற்றும் அதன் தொடர்ச்சி தொடர்பிலும் பேசப்படவுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுவதுடன், இந்த விஜயத்தின் போது இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு உட்பட பல விசேட பிரதிநிதிகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.