கிரெடிட் கார்டுகளுக்கான வட்டி விகிதத்தை 04 வீதத்தினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்க வங்கிகள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
கிரெடிட் கார்டுகளுக்கு தற்போது 34 சதவீதம் வட்டி அறவிடப்படுகின்ற நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இருந்து 30 வீதமாக அறவிட திட்டமிடப்பட்டுள்ளதாக வணிக வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை மத்திய வங்கி அண்மையில் வட்டி வீதத்தை குறைத்துள்ளதுடன், வர்த்தக வங்கிகளும் அதற்கேற்ப வட்டி விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.