புதிய கணக்குகளை திறக்க வங்கியின் முன் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

அஸ்வெசும திட்டத்தின் மூலம் பயன்பெறும் நோக்கில் வங்கிகளில் கணக்கை ஆரம்பிப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நோர்வூட் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மக்கள் இலங்கை மத்திய வங்கியில் புதிய கணக்குளை திறப்பதற்காக இன்று (20.07) நீண்ட வரிசையில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.

குறித்த பகுதியில் கனமழை பெய்கின்ற நிலையில், மக்கள் மழையையும் பொருட்படுத்தாமல் காத்திருப்பதாக செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply