இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை இன்று (21.07) காலை டெல்லியில் சந்தித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க, இன்று (21.07) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெயசங்கரினால் நேற்று ஜனாதிபதி ரணில் வரவேற்கப்பட்டதோடு இருவரும் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
