அங்குருவத்தோட்ட காட்டில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

அங்குருவத்தோட்ட ரத்மல்கொட காட்டில் குழந்தை மற்றும் தாயின் சடலங்கள் இன்று (21.07) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் அங்குருவத்தோட்ட உருதுதாவ பிரதேசத்தில் காணாமல் போன 24 வயதுடைய பெண் ஒருவரும் அவருடைய 11 மாத குழந்தையுமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு உடல்களையும் விலங்குகள் கடுமையாக சேதப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வாசனா குமாரி என்ற 24 வயதுடைய பெண் ஒருவரும் அவருடைய 11 மாத பெண் குழந்தையும் காணாமல்போயுள்ளதாக பெண்ணின் கணவர் அங்குருவத்தோட்ட பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடிப்படையகாகக் கொண்டு பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் பெண்ணின் உறவினர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த பெண்ணின் வீட்டில் சில சில மங்கலான ரத்தக்கறைகளும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply