வவுனியா, மன்னார் வீதயில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, மன்னார் வீதி, 4ம் கட்டைப் பகுதியில் கடந்த (20.07) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வவுனியாவில் இருந்து மன்னார் வீதி வழியாக மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞர் ஒருவர், வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதில் வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த வவுனியா மின்சார சபையில் கடமையாற்றும் 32 வயதுடைய சஜந்தன் என்ற இளைஞரே மரணமடைந்துள்ளார். விபத்து தொடர்பில் நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்னளனர்.