காம்போஜியாவில் இடம்பெற்ற உலகத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் (23.07) நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கேபி ஷர்மா ஒலி அவர்களை சந்தித்துள்ளார்.
இலங்கை – நேபாள நல்லுறவு குறித்தும், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள இணக்கப்பாடுகள், ஒத்துழைப்புகள் குறித்தும் இடஙக சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் கலாசாரப் பிணைப்புக் கொள்கைத் தொடர்பிலும், தற்போதுள்ள பொருளாதார நிலைமை குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
உலக அமைதி சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்.