பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் நாளை (28.07) பிற்பகல் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பிராந்திய மற்றும் உலகளாவிய சவால்கள் தொடர்பில் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயம் இதுவாகும்.
பப்புவா நியூகினியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி நாடு திரும்பும் போது இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விஜயம் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், இவரின் வருகை ஐரோப்பிய சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதனை ஊக்குவிக்கும் எனவும் நம்பப்படுகிறது.
.