நூதனமான முறையில் போதைப்பொருள் விநியோகம் செய்த பெண் ஒருவர் கைது!

வெயங்கொடை மாரபொல பிரதேசத்தில் உள்ள பெரிய மரமொன்றின் உச்சியில் வீட்டை அமைத்து இரகசியமாக போதைப் பொருள் விநியோகம் செய்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெயங்கொடை மாரபொல பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாடி வீட்டில் இருந்து 1 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயின், 6 தேசிய அடையாள அட்டைகள், 5 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் மற்றும் 8 கையடக்கத் தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் தனது வீட்டை ஒட்டிய வனப்பகுதியில் உள்ள பெரிய மரத்தின் உச்சியில் மரத்தடிகள் மற்றும் பலகைகளால் ஆன மாடியை அமைத்து யாரும் பார்க்காத வகையில் போதைப்பொருள் வியாபாரத்தை நடத்தி வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மரத்தின் கீழ் பகுதியில் பை ஒன்றில் பணத்தை வைத்து அதனை கயிறு ஒன்றின் மூலம் மேலே கொண்டு செல்வதாகவும், பணம் கிடைக்கப்பெற்ற பின்னர் போதைப் பொருளை அதே கயிறை பயன்படுத்தி பணத்தை கொடுத்தவர்களுக்கு விநியோகித்தாகவும் கூறப்படுகிறது.

அத்துடன் குறித்த மாடி வீதியில் இருந்து சுற்றுவட்டாரப் பகுதிகளை பரவலாக அவதானிக்க முடிவதாகவும், வெளியாட்கள் நடமாட்டம் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Social Share

Leave a Reply