தந்தையின் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான சிறு குழந்தையொன்று சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொபேகனே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவத்தில், பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் பொரலுவெவ – ரத்மல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய ஆண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று (28.07) இரவு 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், வீட்டில் ஏற்பட்ட சண்டையின் போது சிறுவன் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபரின் தந்தை இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.