லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கடிடையிலான முதற் போட்டி ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. யாழ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.
யாழ் அணிக்காக இறுதி நேரத்தில் சொஹைப் மலிக் அணியுடன் இணையும் வரையுமான காலப்பகுதிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட பங்களாதேஷ் அணியின் இளம் வீரர் தௌபீக் ரிதோய் அபாரமாக துடுப்பாடி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் டுனித் வெல்லாளகேயின் துடுப்பாட்டமும் யாழ் அணிக்கு கை கொடுத்தது. அனைவரின் சராசரியான துடுப்பாட்டம் யாழ் அணி இந்த ஓட்ட எண்ணிக்கையினை பெற கைகொடுத்தது. இருப்பினும் வெற்றி பெறுவதற்கு இந்த ஓட்ட எண்ணிக்கை போதாது. இருப்பினும் யாழ் அணி இறுக்கமாக பந்துவீசினால் வெற்றி வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| நிஷான் மதுஷ்க | Run Out | 12 | 13 | 1 | 0 | |
| ரஹ்மனுள்ள குர்பாஸ் | பிடி – ரமேஷ் மென்டிஸ் | நசீம் ஷா | 21 | 11 | 1 | 2 |
| சரித் அஸலங்க | பிடி – பாபர் அஸாம் | லக்ஷான் சண்டகன் | 12 | 14 | 1 | 0 |
| தௌஹித் ரிதோய் | பிடி – நசீம் ஷா | சாமிக்க கருணாரட்ன | 54 | 39 | 4 | 1 |
| பிரியாமல் பெரேரா | பிடி – நிரோஷன் டிக்வெல்ல | மதீஷ பத்திரன | 22 | 16 | 3 | 1 |
| டுனித் வெல்லாளகே | 25 | 23 | 2 | 0 | ||
| திசர பெரேரா | 14 | 07 | 3 | 0 | ||
| உதிரிகள் | 13 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 05 | மொத்தம் | 173 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நசீம் ஷா | 03 | 00 | 30 | 00 |
| மொஹமட் நவாஸ் | 04 | 00 | 24 | 00 |
| ரமேஷ் மென்டிஸ் | 01 | 00 | 10 | 00 |
| மதீஷ பத்திரன | 04 | 00 | 32 | 01 |
| சாமிக்க கருணாரட்ன | 04 | 00 | 36 | 01 |
| லக்ஷான் சண்டகன் | 04 | 00 | 34 | 01 |
யாழ் அணி
1 திஸர பெரேரா, 2 விஜயகாந்த் வியாஸ்கந்த, 3 ரஹ்மனுள்ள குர்பாஸ், 4 டுனித் வெல்லாளகே, 5 மஹீஸ் தீக்ஷண, 6 அவிஷ்க பெர்னாண்டோ, 7 நிஷான் மதுஷ்க 8 சரித் அஸலங்க 9 பிரியாமல் பெரேரா 10 ஹர்தூஸ் விலோஜன் 11 தௌஹித் ரிதோய்
கொழும்பு அணி –
1 நிரோஷன் டிக்வெல்ல, 2 பாபர் அஸாம், 3 பத்தும் நிஸ்ஸங்க, 4 நுவனிது பெர்னாண்டோ, 5 மொஹமட் நவாஸ், 6 யஷோத லங்கா, 7 சாமிக்க கருணாரட்ன, 8 ரமேஷ் மென்டிஸ், 9 லக்ஷான் சண்டகன், 10 நசீம் ஷா, 11 மதீஷ பத்திரன