LPL 2023 – யாழ் அணி வெற்றியோடு ஆரம்பம்.

ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்ற LPL தொடரின் முதற் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி 21 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

174 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய கொழும்பு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல அதிரடியான சிறந்த ஆரம்பத்தை வழங்கிய போதும் மறுபக்க விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்டன. பாகிஸ்தான் அணியின் தலைவர் பபர் அஸாம் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தமை யாழ் அணிக்கு வாய்ப்பை இலகுவாக்கியது. கொழும்பு அணி இறுக்கமான நிலையில் காணப்பட்ட வேளையில் சாமிக்க கருணாரட்னவின் துடுப்பாட்டம் கொழும்பு அணிக்கு மீண்டும் நம்பிக்கையை வழங்கியது. இருப்பினும் வெற்றிக்கு அது போதுமானதாக அமையவில்லை.

யாழ் அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் இறுக்கமாக பந்துவீசியமை அவர்களுக்கான வெற்றி வாய்ப்புக்கு முக்கியமான காரணமாக அமைந்தது. யாழ் அணியின் களத்தடுப்பும் வெற்றிக்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

வியாஸ்காந் பந்துவீச்சில் 2 விக்கெட்களை கைப்பற்றியது மாத்திரமன்றி, ஒரு பிடி மற்றும் ஒரு ரன் அவுட் ஆட்டமிழப்பை ஏற்படுத்தி முக்கிய பங்கை வழங்கினார். பந்துவீச்சில் இறுக்கமாக பந்துவீசி கொழும்பு அணியை தடுமாற வைத்தார். ஹர்தூஷ் விலோஜன் 3 விக்கெட்களை கைப்பற்றி யாழ் அணிக்காக பந்துவீச்சில் முக்கியமாக கைகொடுத்தார்.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. யாழ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 173 ஓட்டங்களை பெற்றது.

யாழ் அணிக்காக இறுதி நேரத்தில் சொஹைப் மலிக் அணியுடன் இணையும் வரையுமான காலப்பகுதிக்கு சேர்த்துக்கொள்ளப்பட்ட பங்களாதேஷ் அணியின் இளம் வீரர் தௌபீக் ரிதோய் அபாரமாக துடுப்பாடி அரைச்சதத்தை பூர்த்தி செய்தார். விக்கெட்கள் வீழ்த்தப்பட்ட நிலையில் டுனித் வெல்லாளகேயின் துடுப்பாட்டமும் யாழ் அணிக்கு கை கொடுத்தது.

இந்த ஓட்ட எண்ணிக்கை வெற்றிக்கு போதுமானதாக அமையாத போதும், இறுக்கமான பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு யாழ் அணிக்கான வெற்றியினை பெற்றுக் கொடுத்தது.

யாழ் அணி
1 திஸர பெரேரா, 2 விஜயகாந்த் வியாஸ்கந்த, 3 ரஹ்மனுள்ள குர்பாஸ், 4 டுனித் வெல்லாளகே, 5 மஹீஸ் தீக்ஷண, 6 அவிஷ்க பெர்னாண்டோ, 7 நிஷான் மதுஷ்க 8 சரித் அஸலங்க 9 பிரியாமல் பெரேரா 10 ஹர்தூஸ் விலோஜன் 11 தௌஹித் ரிதோய்

கொழும்பு அணி –
1 நிரோஷன் டிக்வெல்ல, 2 பாபர் அஸாம், 3 பத்தும் நிஸ்ஸங்க, 4 நுவனிது பெர்னாண்டோ, 5 மொஹமட் நவாஸ், 6 யஷோத லங்கா, 7 சாமிக்க கருணாரட்ன, 8 ரமேஷ் மென்டிஸ், 9 லக்ஷான் சண்டகன், 10 நசீம் ஷா, 11 மதீஷ பத்திரன

வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நிரோஷன் டிக்வெல்லபிடி -வியாஸ்காந்த்டில்ஷான் மதுசங்க583491
பாபர் அஸாம்Bowledதிசர பெரேரா070810
பத்தும் நிஸ்ஸங்கபிடி -நிஷான் மதுஷ்கஹர்தூஸ் விலோஜன்010200
நுவனிது பெர்னாண்டோபிடி -வியாஸ்காந்த்விஜயகாந்த் வியாஸ்காந்த்171402
மொஹமட் நவாஸ் ஹமட் நவாஸ்பிடி -டில்ஷான் மதுசங்கஹர்தூஸ் விலோஜன்030600
யஷோத லங்காRun Out 110010
சாமிக்க கருணாரட்னRun Out 231521
ரமேஷ் மென்டிஸ்பிடி -டில்ஷான் மதுசங்கஹர்தூஸ் விலோஜன்171011
நசீம் ஷாStump – நிஷான் மதுஷ்கவிஜயகாந்த் வியாஸ்காந்த்000300
லக்ஷான் சண்டகன்  02 02 0
மதீஷ பத்திரன  Bowled 0808  2 0
உதிரிகள்  05   
ஓவர்  19.4விக்கெட்  10மொத்தம்152   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
டில்ஷான் மதுசங்க2.4001802
திசர பெரேரா03002901
மஹீஸ் தீக்ஷண04003900
ஹர்தூஸ் விலோஜன்04002100
விஜயகாந்த் வியாஸ்காந்த்04001702
சரித் அஸலங்க01000600
டுனித் வெல்லாளகே01000800
வீரர்ஆட்டமிழப்புபந்துவீச்சாளர்46
நிஷான் மதுஷ்கRun Out 121310
ரஹ்மனுள்ள குர்பாஸ்பிடி – ரமேஷ் மென்டிஸ்நசீம் ஷா211112
சரித் அஸலங்கபிடி – பாபர் அஸாம்லக்ஷான் சண்டகன்121410
தௌஹித் ரிதோய்   பிடி – நசீம் ஷாசாமிக்க கருணாரட்ன543941
பிரியாமல் பெரேராபிடி – நிரோஷன் டிக்வெல்லமதீஷ பத்திரன 221631
டுனித் வெல்லாளகே  252320
திசர பெரேரா  140730
      
      
      
      
உதிரிகள்  13   
ஓவர்  20விக்கெட்  05மொத்தம்173   
பந்துவீச்சாளர்ஓ.ஓட்டவிக்
நசீம் ஷா03003000
மொஹமட் நவாஸ்04002400
ரமேஷ் மென்டிஸ்01001000
மதீஷ பத்திரன 04003201
சாமிக்க கருணாரட்ன04003601
லக்ஷான் சண்டகன்04003401
    
    

Social Share

Leave a Reply