லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் நாளான இன்று(31.07) கொழும்பு,ஆர். பிரேமதாச மைதானத்தில் பி-லவ் கண்டி மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கேர்ஸ் அணிகளுக்கான போட்டியில் கொழும்பு அணி 27 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெறுவதற்கு கடினமான போட்டியில் மிகவும் சிறந்த பந்துவீச்சு மூலம் இந்த வெற்றியினை பெறக்கூடியதாக அமைந்தது. குறிப்பாக ஆரம்பத்தில் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா மற்றும் மதீஷ பத்திரன சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை கைப்பற்றினார்கள். சுழற்பந்துவீச்சாளர்களும் அழுத்தம் கொடுத்து பந்து வீசினர். ஜெப்ரி வண்டர்சாய் மத்தியூஸின் விக்கெட் அடங்கலாக இரண்டு விக்கெட்களை ஒரே ஓவரில் கைப்பற்ற கண்டி அணியின் தோல்வி உறுதியானது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொழும்பு அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. கண்டி அணியின் இறுக்கமான பந்துவீச்சின் மூலம் கொழும்பு அணியின் ஓட்ட எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டது. 158 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கினை துரதியடிக்க முடியாமல் கண்டி அணி தோற்றுப்போனது.
கொழும்பு அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப இரண்டு விக்கெட்கள் வேகமாக வீழ்த்தப்பட்ட போதும், பபர் அஸாம், நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து 60 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை பகிர்ந்து அணியை மீட்டனர். பபர் அஸாம் அரைச்சதத்தை பூர்த்தி செய்து ஆட்டமிழந்தார். இந்த துடுப்பாட்டமே அவர்களுக்கு வெற்றி பெற முக்கியமான காரணமாக அமைந்தது.
கொழும்பு அணி நேற்றைய முதற் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ள நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| தனுக டபரே | L.B.W | நசீம் ஷா | 04 | 06 | 1 | 0 |
| தினேஷ் சந்திமால் | Bowled | மதீஷ பத்திரன | 10 | 11 | 2 | 0 |
| கமிந்து மென்டிஸ் | Bowled | நசீம் ஷா | 15 | 10 | 2 | 0 |
| அஞ்சலோ மத்யூஸ், | ஜெப்ரி வன்டர்சே | 25 | 22 | 2 | 1 | |
| அஷேன் பண்டார | Bowled | ஜெப்ரி வன்டர்சே | 12 | 14 | 0 | 1 |
| வனிந்து ஹசரங்க | பிடி – நிரோஷன் டிக்வெல்ல | மதீஷ பத்திரன | 09 | 04 | 1 | 0 |
| சர்பராஸ் அஹமட் | 16 | 21 | 1 | 0 | ||
| அமீர் ஜமால் | Bowled | மொஹமட் நவாஸ் | 07 | 09 | 0 | 0 |
| இசுரு உதான, | பிடி – மொஹமட் நவாஸ் | மதீஷ பத்திரன | 07 | 11 | 0 | 0 |
| முகமட் ஹஸ்னைன் | 07 | 12 | 1 | |||
| உதிரிகள் | 18 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 08 | மொத்தம் | 130 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நசீம் ஷா | 04 | 00 | 19 | 02 |
| சா மிக்க கருணாரட்ன | 04 | 00 | 28 | 00 |
| மதீஷ பத்திரன | 04 | 00 | 24 | 03 |
| ஜெப்ரி வன்டர்சே | 04 | 00 | 32 | 02 |
| மொஹமட் நவாஸ் | 04 | 00 | 18 | 01 |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| நிரோஷன் டிக்வெல்ல | L.B.W | இசுரு உதான | 04 | 04 | 1 | 0 |
| பாபர் அஸாம் | பிடி – கமிந்து மென்டிஸ் | இசுரு உதான | 59 | 52 | 4 | 1 |
| பத்தும் நிஸ்ஸங்க | Run Out | 15 | 12 | 2 | 0 | |
| நுவனிது பெர்னாண்டோ | பிடி – அஷேன் பண்டார | முகமட் ஹஸ்னைன் | 28 | 31 | 2 | 1 |
| தனஞ்சய லக்ஷான் | பிடி -டில்ஷான் மதுசங்க | ஹர்தூஸ் விலோஜன் | 12 | 11 | 1 | 1 |
| மொஹமட் நவாஸ் | Bowled | முகமட் ஹஸ்னைன் | 10 | 06 | 2 | 0 |
| சாமிக்க கருணாரட்ன | Run Out | 09 | 04 | 0 | 1 | |
| ரமேஷ் மென்டிஸ் | பிடி -டில்ஷான் மதுசங்க | ஹர்தூஸ் விலோஜன் | 06 | 03 | 1 | 0 |
| உதிரிகள் | 04 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 06 | மொத்தம் | 157 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| இசுரு உதான | 04 | 00 | 39 | 03 |
| முகமட் ஹஸ்னைன் | 04 | 00 | 27 | 02 |
| முஜீப் உர் ரஹ்மான் | 04 | 00 | 28 | 00 |
| அமீர் ஜமால் | 01 | 00 | 15 | 00 |
| வனிந்து ஹசரங்க | 04 | 00 | 22 | 00 |
| தனுக டபரே | 02 | 00 | 14 | 00 |
| கமிந்து மென்டிஸ் | 01 | 00 | 08 | 00 |