மகளிர் உலகக்கிண்ண போட்டிகளில் மேலும் நான்கு அணிகள் உள்ளே.

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கிண்ண தொடரில் இன்று(31.07) குழு B மற்றும் குழு C இற்கான முதல் சுற்றின் இறுதிக் கட்ட போட்டிகள் நடைபெற்றன.

குழு B இற்கான போட்டி ஒன்றில் அவுஸ்திரேலியா அணி கனடா அணியை 4-0 என வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுக்கொண்டது. கனடா அணி தோல்வியை சந்தித்தது. மற்றுமொரு போட்டியில் அயர்லாந்து, நைஜீரியா அணிகள் கோல்களின்றி போட்டியை சமநிலையில் நிறைவு செய்ய நைஜீரியா அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றது.

மகளிர் உலகக்கிண்ண போட்டிகளில் மேலும் நான்கு அணிகள் உள்ளே.

குழு C இற்கான போட்டியில் ஜப்பான் அணி 4-0 என ஸ்பெயின் அணியினை வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுக் கொண்டது. தோல்விடையடைந்த போதும் ஸ்பெய்ன் அணி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகியுள்ளது.

இதே குழுவின் மற்றைய அணிகளான ஷம்பியா, கொஸ்டரிக்கா அணிகளுக்கிடையிலான போட்டியில் ஷம்பியா அணி 3-1 என வெற்றி பெற்றது.

மகளிர் உலகக்கிண்ண போட்டிகளில் மேலும் நான்கு அணிகள் உள்ளே.

ஏற்கனவே நேற்று குழு A இலிருந்து சுவிற்சலாந்து, நோர்வே ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளன.

Social Share

Leave a Reply