சந்தையில் தேயிலை மற்றும் இலவங்கப்பட்டையின் (கறுவா) விலைகள் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக தோட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இந்நிலைமையால் பயிர்களை பராமரிக்க கூட முடியாத பொருளாதார நிலைமைக்கு ஆளாகியுள்ளதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 300 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ தேயிலை துாள் இன்று 150 ரூபாவாக குறைந்துள்ளதாக சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சுமார் 5000 ரூபாவாக இருந்த ஒரு கிலோ இலவங்கப்பட்டை தற்போது 2000 ரூபாவாக குறைந்துள்ளதாகவும் கறுவா தோட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச சந்தையில் தேவை குறைந்துள்ளமையும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.