இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி அனைத்து சிறைகளிலும் 13241 கைதிகள் அடைக்கப்படலாம் ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 29000ஐ எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 19000 கைதிகள் சந்தேகத்திற்கிடமானவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் 10000 குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட கைதிகள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அனைத்து சிறைச்சாலை நிறுவனங்களிலும் கைதிகளை அடைத்து வைக்கும் போக்கு அதிகரித்து வருவதாக சிறைச்சாலை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.