ஆங் சான் சூகிக்கு தண்டனை குறைப்பு!

மியன்மாரின் முன்னாள் அரசுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஐந்து வழக்குகளில் இருந்து இராணுவ ஆட்சியாளர்களால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், அவர் முற்றிலுமாக விடுவிக்கப்படவில்லை எனவும், அவருக்கு எதிராக மேலும் 14 வழக்குகள் இருப்பதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த அனைத்து வழக்குகளுக்கும் எதிராக முழுமையாக அவருக்கு 33 வருட சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தது.

சிறையில் இருந்த அவர், தற்போது வீட்டுக் சிறைக்கு மாற்றப்பட்ட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply