அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை வைத்திருந்தவர்கள் கைது!

மன்னாரில் இருந்து அனுமதிப்பத்திரம் இன்றி குஞ்சு கடலட்டைகளை கொண்டு சென்ற இருவர் இன்று (03.08) காலை மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள சோதனை சாவடியில் வைத்து கைது செய்யப் பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களத்தின் மன்னர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அனுமதிப்பத்திரம் இன்றி கடலட்டைகளை வைத்திருந்தவர்கள் கைது!

அவர்களிடமிருந்து சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குஞ்சு கடலட்டைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சோதனை சாவடியில் வைத்து இராணுவத்தினரால் வாகனம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோதே கடலட்டைகள் அனுமதிப்பத்திரம் இன்றி கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பல்லவராயன் கட்டு பகுதியைச் சேர்ந்த இரு சந்தேக நபர்களையும், அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட கடலட்டைகளையும் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply