இந்நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் இன்சுலின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இன்சுலின் விநியோக டெண்டர் கொடுத்த விநியோகஸ்த்தர், தேவையான அளவு இன்சுலின் வழங்காததால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த இன்சுலின் பற்றாக்குறையை சமாளிக்க, அவசரகால கொள்முதல் கீழ் ஏனைய இரண்டு விநியோகஸ்தர்களிடமிருந்து 50,000 இன்சுலின் பொதிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், அரசு மருந்து வழங்கல் துறையில் இன்சுலின் கையிருப்பு இல்லாததால், மருத்துவமனைகளில் இன்சுலின் பெற்றுக்கொள்ளும், சர்க்கரை நோயாளிகள் பலர், கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.