காணி உரிமை இல்லாத குடும்பங்களுக்கு உறுதி பத்திரம் வழங்க நடவடிக்கை!

மகாவலி பிரதேசத்தில் 15,000 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இம்மாதம் இரண்டாவது வாரத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அனைவரும் ஒரே பாதையில் நிலையான நாடு என்ற தொனிப்பொருளில் நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரொஷான் ரணசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்படி 05 வருடங்களுக்கு மேலாக காணி உரிமை இல்லாத குடும்பங்களுக்கு காணி உறுதிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, மகாவலி பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20,000 குடும்பங்களுக்கு காணி உரிமையை வழங்குவதற்கு ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply