இலங்கையின் பொருளாதாரம் குறித்து மத்திய வங்கியின் நிலைப்பாடு!

2023 ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் இருக்கும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.

வெளிநாட்டுப் பணப்பரிவர்த்தனைகளின் அதிகரிப்பு மற்றும் இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை காரணமாக நாட்டின் பொருளாதாரம் சாதகமான திசையில் இருக்கும் எனவும் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டின் பணவீக்க விகிதம் இந்த ஆண்டு ஜூலையில் 6.3% ஆக இருப்பதாகவும் மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.

கடன் மறுசீரமைப்பு நடவடிக்கையின் இறுதியில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி ஸ்திரமடையும் என மத்திய வங்கி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Social Share

Leave a Reply