இறக்குமதி செய்யப்பட்ட முட்டையை பேக்கரிகளுக்கு வழங்க முடியாது!

இந்தியாவில் இருந்து  நாளாந்தம் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார். 

எனினும், அந்த முட்டைகளை பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்க முடியாது எனத் தெரிவித்த அவர், லங்கா சதொச ஊடாக தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் விநியோகிக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். 

அடுத்த வாரத்திற்குள் அனைத்து பல்பொருள் அங்காடிகளுக்கும் பொதி செய்யப்பட்ட முட்டைகளை விநியோகிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பொதி செய்யப்பட்ட முட்டை ஒன்றை 42 ரூபாவிற்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply