கந்தானை, ஆலய வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08.07) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்துள்ள நிலையில் தீயை அணைக்கும் முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.