கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதனை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், அரிந்தம் பாக்சி, இந்தியா தனது பாதுகாப்பு நலன் சார்ந்த விடயங்களில் அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு துறைமுகத்தில் உள்ளது யுத்தக் கப்பலா இல்லையா என்பது எனக்கு தெரியாது எனத் தெரிவித்துள்ள அவர், வெளியான தகவல்களின் அடிப்படையில், இந்தியாவின் பாதுகாப்பை ஊறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்பதை வலியுறுத்துகிறேன் எனக் கூறியுள்ளார்.