லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு முதற் தடவையாக தம்புள்ளை ஓரா அணி தெரிவாகியுள்ளது.
இறுதிப் போட்டிக்கான அணியை தெரி செய்யும் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்றது. இதில் தம்புள்ளை அணி விக்கெட்களினால் வெற்றி பெற்றது. 147 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பாடிய தம்புள்ளை அணி 19.4 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்த ஓட்ட எண்ணிக்கையினை வைத்துக்கொண்ட காலி அணி போராடுமென எதிர்பார்க்கப்பட்ட வேளையில் காலி அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் அவிஷ்க பெர்னாண்டோ, குஷல் மென்டிஸ் ஆகியோர் காலி அணியின் பந்து வீச்சாளர்களை பதம் பார்த்து நல்ல ஆரம்பம் ஒன்றை வழங்கினார்கள். இருப்பினும் அவிஷ்க பெர்னாண்டோ நான்காவது ஓவரில் ஆட்டமிழந்தார். குஷல் மென்டிஸ் தொடர்ந்தும் சிறப்பாக துடுப்பாடினார். குஷல் மென்டிஸ் சதீர சமரவிக்ரம ஆகியோரின் இணைப்பாட்டம் சிறப்பாக செல்ல அது முறியடியக்கப்பட போட்டி விறு விறுப்பாக மாறியது. இருப்பினும் குஷல் மென்டிஸ், குஷல் பெரேராவுடன் இணைப்பாட்டம் ஏற்படுத்தி மீண்டும் அணியின் வெற்றியினை இலகுபடுத்தினார். இருவரும் 59 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.
இந்தப் தொடரில் முதலிடத்தை பெற்றுக் கொண்ட தம்புள்ளை ஓரா மற்றும் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்ட கோல் டைட்டன்ஸ் அணிகள் இந்த போட்டியில் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. காலி அணி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 146 ஓட்டங்களை பெற்றது.
தம்புள்ளை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பானுக ராஜபக்ஷ முதல் ஓவரிலேயே ஆட்டமிழக்க தம்புள்ளை அணியின் தடுமாற்றம் ஆரம்பமானது. இருப்பினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் லசித் க்ரூஸ்புல்லே நிதானமான ஆரம்பத்தை வழங்கி அணியின் ஓட்ட எண்ணைக்கையினை அதிகரித்தார். இறுதி வரை போராடி சிறந்த போராடாக்கூடிய ஓட்ட எண்ணிக்கையினை பெற்றுக் கொடுத்தார். ஷகிப் அல் ஹசனுடன் இணைந்து அரைச்சத இணைப்பாட்டத்தை வழங்கினார்.
பந்துவீசில் பினுர பெர்னான்டோ கடந்த போட்டிகள் போன்று சிறப்பான ஆரம்பத்தை வழங்கினார். அதன் பின்னர் நூர் அஹமட், தனஞ்சய டி சில்வா ஆகியோரும் சிறப்பாக பந்துவீசினார்கள். ஹெய்டன் கெர்ரின் பந்துவீச்சும் சிறப்பாக அமைந்தது. அத்தோடு இறுதி நேரத்தில் அவரின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது.
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ள தம்புள்ளை அணி எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது. தோல்வியடைந்துள்ள காலி 19 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாவது தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| அவிஷ்க பெர்னாண்டோ | பிடி – லிட்டோன் டாஸ் | ஷகிப் அல் ஹசன் | 24 | 14 | 1 | 3 |
| குசல் மென்டிஸ் | L.B.W | ரப்ரைஸ் ஷம்சி | 49 | 45 | 6 | 0 |
| சதீர சமரவிக்ரம | பிடி – நஜிபுல்லா ஷர்டான் | சீகுஹே பிரசன்ன | 25 | 18 | 4 | 0 |
| குசல் பெரேரா | தசுன் ஷானக | தசுன் ஷானக | 53 | 39 | 4 | 3 |
| தனஞ்சய டி சில்வா | 02 | 02 | 0 | 0 | ||
| 01 | 02 | 0 | 0 | |||
| உதிரிகள் | 05 | |||||
| ஓவர் 19.3 | விக்கெட் 04 | மொத்தம் | 147 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| கசுன் ரஜித | 03 | 00 | 37 | 00 |
| லஹிரு குமார | 03 | 00 | 31 | 00 |
| ஷகிப் அல் ஹசன் | 04 | 00 | 23 | 01 |
| சீகுஹே பிரசன்ன | 04 | 00 | 22 | 01 |
| ரப்ரைஸ் ஷம்சி | 04 | 00 | 37 | 01 |
| லஹிரு சமரகோன் | 01 | 00 | 09 | 00 |
| தசுன் ஷானக |
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பானுக்க ராஜபக்ஷ | பிடி- ஹெய்டன் கெர் | பினுர பெர்னாண்டோ | 00 | 02 | 0 | 0 |
| லசித் க்ரூஸ்புல்லே | Run Out | 80 | 61 | 7 | 0 | |
| லிட்டோன் டாஸ் | பிடி- அலெக்ஸ் ரோஸ் | ஹெய்டன் கெர் | 08 | 07 | 1 | 0 |
| ஷகிப் அல் ஹசன் | பிடி- ஹெய்டன் கெர் | தனஞ்சய டி சில்வா | 19 | 17 | 3 | 0 |
| தசுன் ஷானக | பிடி- ஹெய்டன் கெர் | நூர் அஹமட் | 12 | 08 | 0 | 1 |
| நஜிபுல்லா ஷர்டான் | பிடி- துஷான் ஹேமந்த | நூர் அஹமட் | 02 | 03 | 0 | 0 |
| லஹிரு சமரகோன் | Bowled | ஹெய்டன் கெர் | 15 | 12 | 1 | 1 |
| சீகுஹே பிரசன்ன | Run Out | 08 | 05 | 1 | 0 | |
| லஹிரு குமார | பிடி- தனஞ்சய டி சில்வா | ஹெய்டன் கெர் | 00 | 02 | 0 | 0 |
| கசுன் ராஜித | Run Out | 00 | 02 | 0 | 0 | |
| ரப்ரைஸ் ஷம்சி | L.B.W | ஹசன் அலி | 00 | 01 | 0 | 0 |
| உதிரிகள் | 02 | |||||
| ஓவர் 20 | விக்கெட் 10 | மொத்தம் | 146 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| பினுர பெர்னாண்டோ | 04 | 00 | 33 | 01 |
| ஹசன் அலி | 03 | 00 | 28 | 01 |
| ஹெய்டன் கெர் | 03 | 00 | 18 | 13 |
| தனஞ்சய டி சில்வா | 04 | 00 | 29 | 01 |
| நூர் அஹமட் | 04 | 00 | 27 | 02 |
| துஷான் ஹேமந்த | 02 | 00 | 11 | 00 |