வவுனியாவில் பாதுகாப்பற்ற குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு!

பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழியில் விழுந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் இன்று (17.08) உயிரிழந்துள்ளனர்.

வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் இரண்டு மாணவர்களே  இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

14 மற்றும் 15 வயதுடைய இரு பாடசாலை மாணவர்களே மைதானத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழியில் விழுந்து உயிரிழந்துள்ளனர்.

வவுனியா பல்கலைக்கழக மைதானத்திற்கு எல்லே போட்டிக்காக இந்த மாணவர்கள் சென்றிருந்த நிலையில், அந்த போட்டியின் பின்னரே இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த இரு பாடசாலை மாணவர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு சடலங்கள் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில்,  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொலிஸாரின் பாதுகாப்புடன் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் பாதுகாப்பற்ற குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு!
வவுனியாவில் பாதுகாப்பற்ற குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு!

Social Share

Leave a Reply