லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடரிலிருந்து இரண்டாவது அணியை வெளியேற்றும் போட்டி பி-லவ் கண்டி மற்றும் ஜப்னா கிங்ஸ் அணிகளுக்கிடையில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. முதலில் துடுப்பாடிய கண்டி அணி 20 ஓவர்களில் 08 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
கண்டி அணி ஆரம்பம் முதலே அதிரடி நிகழ்த்தி இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக் கொண்டது. பக்கர் ஷமான் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்த போதும் மறு புறத்தில் மொகாமட் ஹரிஸ் சிறப்பாக துடுப்பாடி ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினார். அவர் ஆட்டமிழக்கமால் நிலைக்க மறு புறத்தில் வந்தவர்கள் அதிரடி நிகழ்த்த கண்டி அணி மிகப்பெரிய இலக்கை தொட்டுள்ளது. டினேஷ் சந்திமால், வனிந்து ஹஸரங்க ஆகியோர் அதிரடி நிகழ்த்த அழுத்தங்களின்றி கண்டி அணி ஓட்டங்களை குவித்தது.
பந்துவீச்சில் மஹீஸ் தீக்ஷண, நுவான் துஷார, அசோல குணரட்ன ஆகியோர் விக்கெட்களை கைப்பற்றியபோதும் ஓட்டங்களை வழங்கினார்கள். டுனித் வெல்லாலகே விக்கெட்களை கைப்பற்றாத போதும் இறுக்கமாக பந்துவீசியிருந்தார்.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி காலி அணியுடன் தெரிவுகாண் போட்டியில் விளையாடவுள்ளது. தோல்வியடையும் அணி இந்த தொடரிலிருந்து வெளியேறும்.
| வீரர் | ஆட்டமிழப்பு | பந்துவீச்சாளர் | ஓ | ப | 4 | 6 |
| பகார் ஷமான் | Stump – குர்பாஸ் | மஹீஸ் தீக்ஷண | 79 | 49 | 8 | 4 |
| பக்கார் ஷமான் | Bowled | நுவான் துஷார | 00 | 02 | 0 | 0 |
| தினேஷ் சந்திமால் | அசேல குணரட்ன | 41 | 24 | 6 | 1 | |
| வனிந்து ஹசரங்க | Bowled | அசேல குணரட்ன | 19 | 11 | 0 | 2 |
| கமிந்து மென்டிஸ் | Bowled | மஹீஸ் தீக்ஷண | 17 | 13 | 1 | 0 |
| ஆசிப் அலி | பிடி – டேவிட் மில்லர் | நுவான் துஷார | 15 | 13 | 0 | 1 |
| அஞ்சலோ மத்யூஸ் | பிடி -திஸர பெரேரா | நுவான் துஷார | 07 | 05 | 1 | 0 |
| சஹான் ஆராச்சிகே, | 01 | 01 | 0 | 0 | ||
| இசுரு உதான | டு பிடி -னித் வெல்லாளகே | நுவான் துஷார | 02 | 02 | 0 | 0 |
| உதிரிகள் | 07 | |||||
| ஓவர் 13 | விக்கெட் 08 | மொத்தம் | 188 |
| பந்துவீச்சாளர் | ஓ | ஓ.ஓ | ஓட்ட | விக் |
| நுவான் துஷார | 04 | 00 | 40 | 04 |
| மஹீஸ் தீக்ஷண | 04 | 00 | 37 | 02 |
| டில்ஷான் மதுசங்க | 04 | 00 | 43 | 00 |
| டுனித் வெல்லாளகே | 04 | 00 | 25 | 00 |
| அசேல குணரட்ன | 04 | 00 | 41 | 02 |