2022ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் முதலாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (18.08) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் லசிக சமரகோன் தெரிவித்துள்ளார்.
இந்த பரீட்சை மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 27ம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த மதிப்பீட்டு பணிகள் பாடசாலை விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படுவதால், எந்தவொரு பாடசாலையும் மேலதிகமாக மூடப்படும் தேவை ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட பணிகள் நேற்று (17.08) முதல் நிறைவடைந்துள்ளதுடன், இரண்டாம் தவணைக்கான இரண்டாம் கட்ட பாடசாலை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 28ம் திகதி மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.