ஹோமாகம பகுதியில் வசிக்கும் மக்களுக்கான விசேட அறிவிப்பு!

ஹோமாகம, கட்டுவன பிரதேசத்திலுள்ள பெயிண்ட் மற்றும் ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தினால் ஏற்படக்கூடிய சுவாச கோளாறுகளை குறைப்பதற்காக, குறித்த பகுதியை அண்மித்த பிரதேசத்தில் வசிப்பவர்களை முகக்கவசம் அணியுமாறு அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

நேற்றிரவு (17.08) ஏற்பட்ட இந்த தீ தற்போதுகட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தீ அணைப்பு பணிகளை முன்னெடுக்க ஹொரணை மற்றும் கோட்டே தீயணைப்புப் பிரிவின் 07 தீயணைப்பு வாகனங்கள், பனாகொட இராணுவ முகாமின் தீயணைப்பு வாகனம் மற்றும் இராணுவக் குழு ஒன்றும் தீயைக் கட்டுப்படுத்த அனுப்பிவைக்கப்பட்ட்டுள்ளதாக ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply