குருந்தூர் மலை பொங்கல் விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று (18.08) காலை இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றையதினமே குறித்த பகுதியில் சில சிங்கள மக்கள் வருகை தந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், நூற்றுக்கணக்கான பொலிஸார், விசேட அதிரடிப் படையினர், குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

பொங்கல் வழிபாட்டை தடுப்பதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த பின்னணியிலும், இன்றைய விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளதாக அறியமுடிகிறது.

Social Share

Leave a Reply