கொலன்னா, நாதோல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் நேற்று (18.08) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வர்த்தகர் அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் பதுங்கியிருந்த வேளையில் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடனாளிகளிடம் இருந்து தப்பிப்பதற்காக காணாமல் போனதாக நடித்து தலைமறைவாகியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.