ஒரு கிலோவுக்கும் அதிகமாக தங்கம் வைத்திருந்தவர் கைது!

ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கத்துடன் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியேற முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேக நபர் நேற்று (18.08) இரவு  மும்பைக்கு புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UK 132 இல் பயணிக்க இருந்ததாக  விமான நிலைய சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

மொஹமட் சிஹாப் நபுஹான்  என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

அவரை சோதனையிட்ட சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்பிரிவின் அதிகாரிகள், அவருடைய உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.28 கிலோ தங்க ஜெல்லை கண்டுப்பிடித்துள்ளனர். 

இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியளில் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply