இலங்கையின் சுகாதாரத்துறை கடுமையான சவால்களை எதிர்நோக்கி வருவதாகவும் தற்போது 216 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் சுகாதாரத்துறையின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
குறித்த மருந்து தட்டுப்பாடானது, குறிபிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், தற்போது காணப்படுகின்ற 216 என்ற எண்ணிக்கையை எதிர்வரும் மாதங்களில் 100 ஆக குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.