அண்மைய நாட்களில் காலி சிறைச்சாலையில் இனந்தெரியாத நோயொன்று பரவிவருவதுடன்,குறித்த நோயால் தற்போது மேலும் 09 கைதிகள் இதே நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று (21.08) இந்த நோயால் பாதிக்கப்பட்ட இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களது மரணம் தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிரிழந்த கைதிகளில் உடல் உறுப்புகள் தற்போது உடற்கூற்று பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் புலின கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
நோய்வாய்ப்பட்ட 9 கைதிகளும் சிறைச்சாலையின் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நிலைமை மோசமடைந்தால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நோய் நிலை காரணமாக, குறித்த சிறையில் உள்ள கைதிகள் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.