தென் சீனக் கடலில் அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவும் பிலிப்பைன்ஸும் இணைந்து நடத்தும் முதலாவது இராணுவப் பயிற்சி இதுவென சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இராணுவப் பயிற்சியை அவதானிப்பதற்காக அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரும் வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இராணுவப் பயிற்சியில் அவுஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் கடற்படை மற்றும் விமானப்படை உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளதுடன், 2000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் இராணுவப் பயிற்சியில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில், தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பல்களுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மீது சீனா தண்ணீர் தாக்குதல் நடத்துவதாக பிலிப்பைன்ஸ் குற்றம் சாட்டியுள்ளது.