கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவு இரண்டாம் நவகம்புர பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர் கிராண்ட்பாஸ், நவகம்புர பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் வந்த ஒருவர் குறித்த கொலையை செய்துள்ளதாகவும், முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதுடன் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.