கஜேந்திர குமாரின் இல்லத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலத்தின் இல்லத்திற்கு முன்பாக இன்று (26.08) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இனவாதத்தை விதைப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தி பிவித்துரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள கஜேந்திர குமாரின் வீட்டிற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த போராட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் அங்கு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிசார் தலையிட்டு எம்.பி.யின் வீட்டிற்கு சுமார் 20 மீற்றர் தூரத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதுடன், பாதுகாப்பிற்காக பொலிஸ், கலகத் தடுப்புப் பிரிவு, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும் இலங்கை விமானப்படையினர் அழைக்கப்பட்டிருந்ததாக  தெரிவிக்கப்படுகிறது.

சுமார் ஒரு மணி நேரம் மறியல் செய்ததை அடுத்து குழுவினர் கலைந்து சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply