சேத விபரங்களை மதிப்பீடு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்!

விவசாயிகளுக்கு ஏற்படும் அனைத்து செலவுகளையும் மதிப்பீடு செய்து பயிர் சேதத்திற்கான  இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை விவசாய சம்மேளனம் கூறியுள்ளது. 

வறட்சியினால் நெற்செய்கை சேதமடைந்துள்ள அம்பலாந்தோட்டை லியங்கஸ்தோட்டை விவசாயிகளை சந்திப்பதற்காக அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன நேற்று (26.08) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். 

குறித்த விஜயத்தின்போதே அவர் மேற்படி தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இந்த ஒரு விவசாயி ஒரு ஏக்கருக்கு 150,000 ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார். 

அனைத்தையும் மதிப்பிட்டு இந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்தார். 

இதேவேளை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிப்பதற்கான யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply