நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி மற்றும் காலி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெரும்பால இடங்களில் 100 மில்லிமீற்றர் பலத்த மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் எதிர்வுக்கூறியுள்ளது.