அவசரகால கொள்வனவுகளின் கீழ் 400 வகையான மருந்துகள் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இருப்பினும் மருத்துவமனைகளில் 77 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்திய கடன் திட்டங்களின் கீழ் பெறப்பட்ட 378 மருந்துகள் வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.