சமையல் எரிவாயு விலையில் மாற்றம்!

சமையல் எரிவாயுவின் விலை இன்று (04.09) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரித்து 3127 ரூபாவிற்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 5 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை 58 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1256 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2.3 கிலோ கிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலை 26 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 587 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தையில் எரிவாயு விலை அதிகரித்துள்ளமைக்கு இணங்க குறித்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Social Share

Leave a Reply